×

தடுப்பூசி போட்டதால் இறந்ததா குழந்தை ? திருவண்ணாமலையில் பரபரப்பு !

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட குழந்தை மறுநாளே இறந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட குழந்தை மறுநாளே இறந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சீரஞ்சீவி எனும் லாரி ஓட்டுனர். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் லித்தீஷ் என்ற 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனால் பெற்றோர் சோகமாகியுள்ளனர். இதையடுத்து மறுநாள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என நினைத்து தூங்க வைத்துள்ளனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்ல மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். தடுப்பூசி போட்டால்தான் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்பின்னர் போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News