×

பொண்ணு ஆசைப்பட்டான்னு போட்டோ எடுத்தேம்பா அது குத்தமா ? - உதயநிதி

இந்தியா முழுக்க நேற்று  விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வாழ்த்து கூறி கடவுளை வழிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். திமுக -வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவு விநாயகர் சிலையை யாரோ ஒருவர் கையில் ஏந்தியபடி புகைப்படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், வாழ்த்து ஏதும் கூறாமல் மொட்டையாக பதிவிட்டிருந்த இந்த புகைப்படம் நேற்று இரவில் இருந்து தற்போது வரை பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ஏற்கனவே திமுக கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறது என்று எதிர்ப்தரப்பினர் பிரசாரம் செய்து வரும் நிலையில் இது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின்  " எனக்கும்,எனது மனைவிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே" என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News