×

பழைய நியாபகம் வந்துடுச்சா..?  - குஷ்பு வெளியிட்ட பொக்கிஷ போட்டோ!

பிரபுவுடன் குஷ்பு பதிவிட்ட பழைய புகைப்படம்

 

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலத்து முன்னணி நடிகையான குஷ்பு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் பல நட்சத்திர நாயகன்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் குஷ்புவும் நடிகர் பிரபுவும் காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா , அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,  நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் "நடிகர் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து 1990ல் வெளியான "மை டியர் மார்த்தாண்டம்" என்ற படத்தின் முதல் நாள் படப்பிடிப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு "எப்போதும் எனக்கு பிடித்த சக நடிகர் கியூட் பிரபு" என அழகிய கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த அழகிய ஜோடியை திரையில் காண்பதை ரொம்ப மிஸ் பண்றோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News