×

தென் ஆப்பிரிக்க வீரர்களை அவமதித்ததா மேற்கு வங்க அரசு ?

தென் ஆப்பிரிக்க தொடர் சம்மந்தமாக மம்தா பானர்ஜிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மார்ச் 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது.  ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் மக்கள் கூட்டத்தில்  வைரஸ் பரவலுக்கான சாத்தியம் அதிகமாக இருக்கும் என்பதால் தொடர் ரத்து செய்யப்பட்டது.

இதில் கடைசிப் போட்டி கொல்கத்தாவில் நடக்க இருந்த கடைசிப் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்று கொல்கத்தாவில் உள்ள சிட்டி சென்டரில் அனுமதி தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News