விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

 
விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் வெளியான படங்களில் அண்ணாச்சி நடித்த ‘லெஜண்ட்’ படம் மட்டுமே கொஞ்சம் தேவலாம். ஆனால், அந்த படமும் வசூல் ரீதியாக ஓடவில்லை. பரத் நடித்த காளிதாஸ் 2, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரித்து பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, TN2026, கடைசியாக வெளியான தனுஷின் கர என ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக ஒரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை.

தேர்தல் தான் முக்கிய காரணம் என்றும் அதெல்லாம் கிடையாது, படங்கள் சிறப்பாக இல்லை என்றும் அதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மே மாதம் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகுமா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், தனுஷின் கர மற்றும் சூர்யாவின் கருப்பு படங்களுக்கு போட்டியாக ஜன நாயகன் வெளியாகாது எனக் கூறுகின்றனர்.

கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிலையில், நடிகை த்ரிஷா அந்த விழாவில் பங்கேற்கவில்லை. த்ரிஷாவை தவிர்த்து படத்தில் நடித்த சுவாசிகா உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்றனர்.

மேலும், இதுதொடர்பாக த்ரிஷா தனக்கான இன்வைட் மிஸ் ஆகியிருக்கோமோ என்னமோ என பகிரங்கமாக கலாய்த்த நிலையில், தற்போது படக்குழு த்ரிஷாவின் அறிமுக புரமோவை சவுத் குயின் என்ப் போட்டு வெளியிட்டு சமாளிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

விஜய்யுடன் த்ரிஷா ஜோடியாக வெளியே வந்ததும் விஜய் - த்ரிஷா உறவுகள் குறித்து வலம் வரும் தகவலால் தான் சூர்யா தனது கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷா வேண்டாம் என முடிவு செய்துவிட்டாரா? என கேள்விகள் அதிகரித்துள்ளன.

கருப்பு படம் இன்னொரு ‘கர’ படமாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்கள் குறிப்பாக சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

From Around the web