×

டிக்டிக்டிக் பார்த்த போது கூசலயா? இப்பதான் கூசுதா? - பாரதிராஜாவுக்கு சந்தோஷ் பதிலடி

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது ‘இரண்டாம் குத்து; படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் ஆபாசமாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை பாரதிராஜா கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் ‘கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும்  வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்...?குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்" என கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளியான ‘டிக்டிக்டிக்’ பட போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சந்தோஷ் பி ஜெயக்குமார் ‘இத பார்த்த போது கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ?’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News