×

காப்பான் வசனத்தை காப்பி அடித்தாரா தமிழக முதல்வர்? வைரலாகும் வீடியோ

சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் உண்மையாகவே நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

இந்த படத்தில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்தையும் சீரழிக்கும் காட்சி ஒன்று உள்ளது. இதேபோன்று உண்மையாகவே குஜராத் மாநிலத்திலும் பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகளிலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை சீரழித்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்யா ஒரு பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்த அறிவிப்பை கடந்த 2 தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காட்சியில் ஆர்யா ’விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்திருப்பார். அதேபோன்று கடந்த ஞாயிற்றுக் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய நிலங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபூர்வ ஒற்றுமை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News