×

அந்த நடிகர் யார் என்று தெரியாதுன்னு சொன்னா நான் வேசியா... ?  

கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகை மீரா சோப்ராவிடம் இணையவாசி ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என கேட்டார். அதற்கு, மீரா மகேஷ் பாபு என பதில் கூறினார்.

 

உடனே இன்னோரு ரசிகர், " ஜூனியர் என் டி ஆர் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு, அவரை யார் என்று எனக்கு தெரியாது என முகத்தில் அடித்தார் போல் பதில் கூறினார். இதனால் கடுப்பான ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் மீரா  சோப்ராவை கண்டபடி ஏசியுள்ளனர். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததை தாங்கமுடியாத மீரா, ஜூனியர் என் டி ஆரை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், "உங்களை விட மகேஷ்பாபுவை எனக்கு பிடிக்கும் என்பதால் என்னை வேசி என்றும் ஆபாச நடிகை என்றும் அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எனது பதிவை உதாசீனப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஒருவரின் ரசிகராக நீங்கள் இல்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் "நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது உங்கள் பெற்றோர்கள் அவரது ரசிகர்களால் கொல்லப்படலாம். என கடுங்கோபத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. ஆனால், இவரது நிஜ பெயர் மீரா சோப்ரா. இவர் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள மீரா சோப்ரா வாய்ப்புகள் சரியாக கிடைக்காதல் பாலிவுட்டிற்கே சென்றார். அங்கும் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு ஜூனியர் NTR யார் என்று தெரியாதென்று சொல்லியிருப்பது டோலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை ஹைதராபாத் போலீஸ்க்கு டேக் செய்து நடவடிக்கைக்காக காத்திருக்கிறார் மீரா சோப்ரா.

From around the web

Trending Videos

Tamilnadu News