Connect with us

Cinema News

டி.ராஜேந்திரன் படங்களில் இதையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? இந்த படம் இங்கு தான் ஷூட் செய்தார்களாம்…

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான டி.ராஜேந்தர் படங்களில் சில அக்மார்க் விஷயங்கள் இருக்கும். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.

தமிழ் சினிமாவில் பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, முத்துராமன் என கலக்கி கொண்டிருந்த காலத்தில் இயக்குனராக எண்ட்ரி ஆகிறார். வெறும் புதுமுகங்களை மட்டுமே வைத்து இவர் இயக்கிய ஒரு தலை ராகம் ஒரு வருஷம் திரையரங்கில் ஓடியது.

T Rajendar

படித்துக்கொண்டிருக்கும் போது ரயிலில் தாளம் போட்டு நண்பர்களுடன் பாடுவது ராஜேந்தரின் வழக்கம். அந்த பாடலை தன்னுடைய முதல் படத்தில் வைத்தார். முதல் படமான ஒரு தலை ராகம் அவரின் கல்லூரி வாழ்க்கையில் நடந்த கதை என்பதால் படத்தினையும் டி.ஆர். படித்த ஏவிசி கல்லூரியில் தான் படமாக்கினார்களாம்.

முதல் படத்தில் இருந்தே அவர் படங்களில் கேமியா வேடத்தில் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார். என்னத்தான் அவர் அடுக்கு மொழிகளை கலாய்த்தாலும் அவர் மாதிரி யாராலும் தமிழ் பேசவே முடியாது. அது போல அவரின் படங்களிலும் வசனங்களும் அடுக்கு மொழி தமிழிலே எழுதி இருப்பார்.

T Rajendar

அவரின் ரயில் பயணங்களை பார்த்த யாரும் அழுகாமல் இருக்க மாட்டார்கள். டி.ஆரின் எல்லா படங்களிலுமே 9 எழுத்துக்களில் தான் டைட்டில் வைத்தார். தங்கைகோர் கீதம் படத்தில் தான் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். தங்கை சென்டிமெண்ட் சரியாக கிளிக்காக பெண்களிடம் அவருக்கான இடம் அதிகமாகியது. இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதி இருந்தார். கதை, திரைக்கதை தொடங்கி இந்த படத்தில் பாட்டும் பாடி விட்டார்.

இதையும் படிங்க: சிம்பு நடித்த மாஸ் ஹிட் பாடலை எழுதிய அந்த இயக்குனர்… யாருடன் உட்கார்ந்து எழுதினார் தெரியுமா?

ராஜேந்தருக்கு இசை குறித்து பயிற்சியெல்லாம் இல்லை. அவர் முறையாக அதை கத்துக்கொள்ளவில்லை. டி.ராஜேந்தரின் படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்து இருக்கிறார். இப்படி டி.ஆருக்கு பெரிய திறமை இருந்தது. ஆனால் அவரால் தொடர்ந்து சினிமா துறையில் இருக்க முடியாமல் போனது என்னவோ கோலிவுட்டிற்கு தான் இழப்பு.

Continue Reading

More in Cinema News

To Top