">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கஸ்தூரிக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? – விஜய் டிவி விளக்கம்
கஸ்தூரிக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? – விஜய் டிவி விளக்கம்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார். 46 வயதாகும் நடிகை கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் யோசிக்காமல் தனது கருத்தை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியே பேமஸ் ஆகிடுவார். அதனாலே இவரை ட்விட்டர் கஸ்தூரி என பலரும் அழைக்கிறார்கள்.
தற்போது பிக்பாஸ் குறித்து ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தனக்கு இதுநாள் வரை அதற்கான சம்பள தொகையை விஜய் டிவி நிறுவனம் கொடுக்கவே இல்லை என கூறி ட்விட் போட்டு ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்சியில் தான் கலந்துக்கொண்டதற்கான முக்கிய நோக்கமே ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு தான் ஆனால் பிக்பாஸில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். விரைவில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில் கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள விஜய் டிவி ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கஸ்தூரிக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. அவருடையை ஜி.எஸ்.டி பதிவு முறையில் சில தவறுகள் இருந்தது. எனவே, அதை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். சரியான ஆவணங்களை கஸ்தூரி கொடுத்த பின் அந்த தொகை அவருக்கு கொடுக்கப்படும். மேலும், விஜய் டிவியில் அவர் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கு அவர் விலைவரப்பட்டியல் (Invoice) இதுவரை சமர்பிக்கவில்லை. அதனால் அந்த தொகை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.