ஷங்கருக்கு போடப்பட்ட உத்தரவு.. ‘இந்தியன் 2’ல விட்டத கேம் சேஞ்சர்ல பிடிச்சிருவார் போலயே
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் இந்தியன் 2. அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத் தோல்வியின் எதிரொலி அவர் அடுத்து இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் ஒலித்தது. அதுவும் ஆந்திராவில் ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தனர். ஏனெனில் இந்தியாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் ஷங்கர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இந்தியன் 2 திரைப்படம் அமைந்திருந்த வேளையில் அந்தப் படமே இந்த அளவு தோல்வி அடைந்து விட்டது.
அதனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தை என்ன செய்ய காத்திருக்கிறார் என ஆந்திர ரசிகர்கள் கவலையில் இருந்தனர். எப்படியோ படத்தை எடுத்து முடித்துவிட்டு படம் ஒரு வழியாக பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்தப் படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். கிட்டத்தட்ட பாடலுக்காகவே 92 கோடி செலவழித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
மிக பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேம் சென்டர் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கின்றது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறதாம். நாளை இந்த படத்திற்கான சென்சார் நடைபெற இருக்கிறதாம். இசை வெளியீட்டு விழா முடிந்ததும் படத்தை சரியான முறையில் ப்ரோமோட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியிருக்கிறாராம் .
இதில் ஷங்கருக்கு சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறாராம் தில் ராஜு. அதாவது இதை கட்டளையாகவும் எடுத்துக் கொள்ளலாம். கண்டிஷன் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். உத்தரவாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த படத்தை பற்றி எல்லா சேனல்களிலும் உங்களுடைய பேட்டி இருக்க வேண்டும் என ஷங்கரிடம் கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஷங்கரை பொருத்தவரைக்கும் பெரிய அளவில் பேட்டி எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால் தில் ராஜு சொன்னதின் பேரில் எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம் ஷங்கர். இது ஒருவேளை இந்தியன் 2 படத்தில் அவருக்கு விழுந்த அடி கூட காரணமாக இருக்கலாம். இந்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக்க வேண்டும் என்ற முனைப்போடு ஷங்கரும் ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறார்.