அச்சச்சோ அதெல்லாம் பொய்யா? ஒரு வருஷம் ஆச்சு.. வாரிசு படத்த இப்படி சொல்லிட்டாரே?
கேம்சேஞ்சர்:நேற்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது .இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் சங்கர் இந்த படத்தை மிகவும் கவனத்துடன் கையாண்டு வந்தார். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா என பல நடிகர்கள் நடித்துள்ளனர். வழக்கமான கதை என்றாலும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
வசூலில் மண்ணை கவ்வியது:படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 50 கோடியை நெருங்கியுள்ளது. தமிழை விட தெலுங்கில் தான் அதிகமாக கலெக்ஷனை அள்ளியது. தெலுங்கில் 38 கோடியை இந்த படம் வசூலித்து இருக்கிறது. படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுக்கும் கிட்டத்தட்ட 75 கோடி வரை செலவழித்து இருக்கிறார்கள்.
வாரிசு படத்தால் நஷ்டமா?ஆனால் முதல் நாள் வசூல் என்பது மிகவும் குறைவாகவே வந்திருக்கிறது. இந்த நிலையில் தில் ராஜு சமீபத்திய ஒரு பேட்டியில் கேம் சேஞ்சர் படத்தை நம்பி வாரிசு படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். வாரிசு படத்தை தயாரித்தவரும் தில் ராஜு தான். வாரிசு பட ரிலீஸ் சமயத்தில் படத்தைப் பற்றி ஆஹா ஓஹோன்னு பேசி இருந்தார் தில் ராஜு .ஆனால் இப்போது ஒரு பேட்டியில் வாரிசு படம் எங்களுக்கு நஷ்டம் தான் என ஓப்பனாகவே சொல்லி இருக்கிறார்.
அதனால் கேம் சேஞ்சர் படம் எங்களுக்கு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் .அவர் பேசிய எந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கடந்த நிலையில் இப்போது வாரிசு படத்தை பற்றி இப்படி பேசுகிறாரே தில் ராஜு. அப்போ வாரிசு பட ரிலீஸ் சமயத்தில் படத்தின் கலெக்ஷன் 200 கோடியை தாண்டியது என்று சொன்னதெல்லாம் பொய்யா .
ஏன் அப்படி சொல்ல வேண்டும். மூன்றாவது நாளிலேயே படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை மட்டும் வைத்து வெற்றி விழா கொண்டாடினார்கள். அது எந்த கணக்கில் சேரும் என்றெல்லாம் தில்ராஜுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள். கிட்டத்தட்ட வாரிசு படம் 300 கோடி கலெக்ஷனை அள்ளி இருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனமே போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. ஆனால் இப்பொழுது அந்த படத்தால் நஷ்டம் என சொல்கிறார் தில்ராஜு. ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என கோடம்பாக்கத்திலேயே அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.