Categories: Cinema News latest news throwback stories

ஒரே படம் 26 வருஷமா ஒரு தியேட்டர்ல.., உலக மகா ஹிட்னா இது தான்.! ஆல் டைம் பேவரைட்..,

தற்போது எல்லாம் தியேட்டர் ரிலீஸ் படங்களுக்கு ஆயுள் மிக குறைவு. இப்போதெல்லாம் நாட்களை விட அதன் வசூல் தான் கணக்கிடப்படுகிறது. அதனால் தான் 2வது நாளே பிளாக் பாஸ்டர் என போஸ்டர் ஒட்டி விடுகின்றனர். அந்த முதல் 3 நாள் கலெக்சன் படத்தை காப்பாற்றி விடுகிறது.

ஆனால், ஒரு படம் 25 வருடங்களை கடந்து இன்னும் தியேட்டரில் ஓடி கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அது வேறு யாருமல்ல , ஷாருக்கான் ஹீரோவாக நடித்து கஜோல் ஹீரோயினாக நடித்து 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன தில்வாலே துல்ஹனியா லே ஜாயென்கே (dilwale dulhania le jayenge) திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் மும்பையில் உள்ள மரத்த மந்தி எனும் திரையரங்கில் ரிலீஸ் ஆகி, 25 வருடங்களை கடந்துள்ளதாம். தினமும் குறையாமல் 80 நபர்கள் பார்த்துவிடுகின்றனராம். வார இறுதி நாட்களில் 300 நபராவது பார்த்து விடுகின்றனராம்.

இதையும் படியுங்களேன் – சூப்பர் ஸ்டாரை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.! அந்த சம்பவம் நடக்க வாய்பிருக்கோ.?! போட்டோ ஆதாரம் இதோ..,

 

இந்த தியேட்டர் ஓனருக்கு இந்த படம் மிகவும் பிடித்துப்போன ஒன்றாம். மேலும், ரசிகர்களுக்கும் தினமும் குறையாமல் வந்து பார்ப்பதால் அவரும் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கவில்லை. சுமார் 9000 முறை இந்த படத்தை ஆபரேட்டர் பார்த்துள்ளாராம்.

கொரானாவில் அனைத்து திரையரங்கும் மூடப்பட்ட போது இந்த திரைப்படமும் திரையிட முடியாமல்  போனதாம். அதன் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு அப்போதும் திரைப்படம் திரையிடப்பட்டதாம்.

Manikandan
Published by
Manikandan