×

நா சொல்ற மாதிரி போடு… அடிச்சா பாத்துக்கலாம்… தமிழில் பேசி கில்லி மாதிரி விக்கெட்டை தூக்கிய தினேஷ் கார்த்திக்!

தினேஷ்  கார்த்திக் சக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியிடம் தமிழில் ஆலோசனை சொல்லி விக்கெட்டை எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

தினேஷ்  கார்த்திக் சக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியிடம் தமிழில் ஆலோசனை சொல்லி விக்கெட்டை எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

நேற்று நடந்து முடிந்த் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி தனது சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு செயலை செய்தார்.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் தெவேதியா பேட் செய்யும் போது வருண் சக்ரவர்த்தியிட ம் ‘நேரா உள்ள போடு அடிக்கமாட்டான். அடிச்சா பாத்துக்கலாம் ‘ என ஆலோசனைக் கூற அதன் படி வருண் கூக்ளில் வீச அந்த பந்தில் ராகுல் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு முன்னரும் இதுபோல அஸ்வின் மற்றும் முரளி விஜய் ஆகியோரும் தமிழில் பேசிக் கொள்ளும் சம்பவங்கள் நடந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News