என்கிட்ட கார் இல்ல... வசதி இல்ல - இயக்குனர் ராமிற்கு இப்படி ஒரு நிலைமையா?

 
director ram

இயக்குனர் ராம்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான ராம் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அது அத்தனையும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து வெற்றி திரைப்படங்களாக தான் இருக்கிறது .

வித்தியாசமான கண்ணோட்டத்தில் படத்தை இயக்கி அதை மாபெரும் வெற்றி பெறச் செய்யும் தகுதியுடைய இயக்குனராக ராம் பார்க்கப்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் .

director ram

வெற்றிப்படங்கள்: 

தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு, பறந்து போ உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கி அதில் மாபெரும் வெற்றியை படைத்தவர். மேலும்  தங்க மீன்கள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம் பிடித்து திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்துக்கு மத்திய அரசு மூன்று தேசிய விருதுகளை வழங்கி இருந்தது. இப்படி பிரபலமான இயக்குனராக வலம் வரும் டாக்டர் ராம் ,டொட்டர்டாம் , கேன்ஸ் , டைகர் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களை சுற்றி பார்த்து வந்தவர் ராம்.

எளிமையான வாழ்க்கை: 

director ram

இவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தும் கூட மிகவும் எளிமையாக, தாழ்மையாக, அன்பாகவும் இருப்பதை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம் இயக்குனர் ராம் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னிடம் காசு இல்லைன்னு ஒருநாளும் நான் கஷ்டப்பட்டதே இல்ல. நீங்க சொல்ற மாதிரி எனக்கு கார் இல்லாமல் போகலாம். காசு இல்லாம இருந்திருக்கலாம், ஆனால்  பைக்ல போற அளவுக்கு தேவையான காசு என்னிடம் இருக்கு. எனவே கார் வேண்டுமா? பைக் வேணுமா? என்பது என்னோட விருப்பம் அதனால கார் வாங்கினால் தான் நீ வாழ்க்கையில ஜெயிச்சுட்ட என்பது தவறு. அவரவர் மனதிற்கு திருப்தி தரக்கூடிய வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்சி தான் என்கிறார் ராம். 

Tags

From Around the web