Categories: Cinema News latest news

ஆஸ்கர்லாம் பெரிய விருதே கிடையாது! விருதுக்கெல்லாம் இப்ப மதிப்பே இல்ல – எதிர்ப்பை தெரிவித்த அமீர்..

தமிழில் மதிக்கப்படும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இவர் பல படங்கள் இயக்கி இருந்தாலும் அதில் மிக முக்கியமாக பேசப்படும் திரைப்படம் பருத்திவீரன். நடிகர் கார்த்தி மற்றும் அமீர் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாகும்.

சமூகம் சார்ந்து பல விஷயங்களை பேசக்கூடியவர் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு விருது கிடைத்தது குறித்து அமீரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அமீர் பதிலளிக்கும்போது இந்திய திரைப்படம் ஒன்றிற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

Ameer

ஆனால் நாம் கொண்டாடும் அளவிற்கு ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது. இந்தியாவில் எப்படி இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருது அளிக்கிறார்களோ, அதே போல அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அளிக்கப்படுகிற விருதுதான் ஆஸ்கர். அதை உயர்வாக பார்ப்பது சரியல்ல என கூறியிருந்தார்.

விருதுகளுக்கு மதிப்பு இல்லை:

அப்போது பல நல்ல இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை இசையமைத்து இருக்கும்போது நாட்டுக்கூத்து பாடலுக்கு மட்டும் ஆஸ்கர் கிடைத்துள்ளது. பணம் கொடுத்து ஆஸ்கர் வாங்கியதாக கூறப்படுகிறதே? என பத்திரிக்கையாளர் ஒருவர் அமீரிடம் கேட்டார்.

keeravani

அதற்கு அமீர் பதிலளிக்கும்போது எல்லா விருதுகளிலும் அரசியல் இருக்கு. தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த காலக்கட்டங்களில் அவரது நடிப்பிற்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே கிடையாது. ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கவில்லை. தேவர் மகன் திரைப்படத்திற்கு கிடைத்த விருதையும் அவர் பெறவில்லை. உண்மையில் இந்த விருதுகளுக்கெல்லாம் மதிப்பே கிடையாது. இதை விட்டு விலகி இருப்பதே நல்லது என அமீர் கூறியுள்ளார்.

Published by
Rajkumar