Categories: Cinema News latest news

படத்தை திருடும்போது இப்படி செஞ்சா சிக்க மாட்டாங்க! – பட திருட்டில் உள்ள நூதன முறையை விளக்கும் அமீர்..

தமிழில் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய திரைப்படங்கள் குறைவுதான் என்றாலும் தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக அமீர் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மற்ற படங்களில் இருந்து காட்சிகளை திருடுவது பற்றி அமீர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். பொதுவாகவே அனைத்து சினிமாக்களிலும் கதை திருடும் இயக்குனர்கள், காட்சிகளை திருடும் இயக்குனர்கள் இருப்பார்கள்.

திரைப்படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பதை விட பெரும் தவறாக இந்த காட்சிகளை திருடுவது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

பட காட்சிகள் திருட்டு:

தமிழில் சில இயக்குனர்கள் இதை செய்கின்றனர். இதுக்குறித்து அட்லி கூறும்போது “கதை திருடுவது போல அல்ல காட்சிகளை திருடுவது, ஒரு படத்தின் கதையை திருடினால் எளிதாக அவர் மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் காட்சிகளை திருடுவது அப்படி அல்ல! ஒரு படத்தின் காட்சிகளை இன்னொரு இயக்குனர் அவரது திரைப்படத்தில் வைக்கிறார் எனில் அதற்கு சில விதிமுறைகள் உண்டு.

Ameer

ஒரு படத்தில் இருந்து 7 காட்சிகளை தொடர்ந்து திருடியிருந்தால்தான் அது காட்சி திருட்டாக பார்க்கப்படும். எனவே காட்சிகளை திருடுபவர்கள் 6 காட்சிகள் வரை படத்தில் இருந்து திருடிவிட்டு 7 வது காட்சியை மட்டும் மாற்றி அமைத்து விடுவார்கள். பிறகு மீண்டும் 6 காட்சிகளை காபி அடித்து வைப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்” என கூறியுள்ளார் அமீர்.

Published by
Rajkumar