பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம்.. ஆனா முதல்வராக முடியாது! விஜய்க்கு நல்லதல்ல.. அமீர் போட்ட பதிவு

by Rohini |   ( Updated:2024-12-07 10:36:19  )
ameer
X

ameer

நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜய் இவர்கள் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சினிமாவில் ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். அவர் இப்போது தனியாக கட்சி ஒன்றை ஆரம்பித்து அவருடைய அரசியல் பணிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில்தான் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். அந்த மாநாட்டிற்கு பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியாக நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிதான். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ள இருப்பதாக இருந்தது.

ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. கூட்டணி கட்சியின் அழுத்தத்தினால்தான் இந்த விழாவிற்கு திருமாவளவன் வரவில்லையோ என்று பேசியிருந்தார் விஜய். இதை திருமாவளவனும் மறுத்திருந்தார். விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் அனல்பறக்க பேசியிருந்தார். அதுவும் ஆளும் மாநிலக் கட்சியை எதிர்த்தும் சில விஷயங்களை பேசியிருந்தார்.

தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு இனியும் இடமில்லை. 2026இல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்படக் கூடாது என்ற வகையில் பேசியிருந்தார். இதை பற்றி உதய நிதியிடம் கேட்டதற்கு அந்தாளுக்கு அறிவு இல்லை என்று கூறினார். இந்த நிலையில் இயக்குனர் அமீர் திடீரென ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போட்ட பதிவாக பார்க்கப்படுகிறது.

‘பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதலராகவே முடியாது. செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜய் அவர்களின் அரசியலுக்கு நல்லதல்ல’ என தன்னுடைய வாட்ஸ் அப் பதிவில் பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் அமீர்.

Next Story