மாரி செல்வராஜ் தயாரிப்பில் அமீர் ஹீரோ - இதை யாருமே எதிர்பார்க்கலையே

மாரி செல்வராஜ் தயாரிப்பில் அமீர்  ஹீரோ - இதை யாருமே எதிர்பார்க்கலையே

 
mari selvaraj

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் மாரி செல்வராஜ் ஒருவர். பரியேறும் பெருமாள் என்ற முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றவர் இவர். இதனை தொடார்ந்து அடுத்த படமான கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் என தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது வாழை படத்தின் 2ம் பாகத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனரான மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாலராகவும் உயர்ந்துள்ளார். அவரது முதல் படத்தில் அமீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக லப்பர் பந்து புகழ் சுவாசிகா நடிக்கிறார். மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் அரவிந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web