×

இயக்குனரின் காதல் டார்ச்சர்... புகார் செய்த நடிகை.. கைது செய்த போலீஸ்!

சினிமாவில் பிரச்சனைகள் வருவதும் காவல் நிலையம் வரை செல்வதும் தற்போது வழக்கமாகி விட்டது. அதனை தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் கொடுத்த புகார் அடிப்படையில் இயக்குநரை போலிசார் கைது செய்துள்ளனர்.

 

தற்போது இளம் நடிகையான ஸ்வேதா தன்னுடைய இயக்குனர் ரஞ்சிதி தனக்கு காதல் தொல்லை கொடுக்கப்பதாக சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் இயக்குனரை கைது செய்துள்ளனர்.

திருப்பூர், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித்திற்கு வயது 25. இணையதள தொடர்களை இயக்கியும், தயாரித்தும் வருகிறார்.

அதே போல சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் நடிகை ஸ்வேதாவுக்கு வயது 22. ரஞ்சித் காதலை சொல்ல ஸ்வேதா மறுத்துள்ளார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்துவந்துள்ளார்.

இனி தொந்தரவு செய்யமாட்டேன் என ரஞ்சித் உறுதி அளித்ததால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இந்த சமயத்தில் தான் புதன் கிழமை ரஞ்சித் மீண்டும் காதல் தொந்தரவு செய்துள்ளாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News