அட்லியையே அசரவைத்த ரிஷப் ஷெட்டி!.. காந்தாரா 2 பாத்துட்டு சொன்ன கமெண்ட்!....
Kantara 2: ரிசப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான திரைப்படம் Kantara Chapter 1. இப்படத்தின் முதல் பாகம் 2022ம் வருடம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இல்லாமல் அந்த கதைக்கு முன் கதையாக Kantara chapter 1 படத்தை உருவாக்கி இருக்கிறார் ரிசப் ஷெட்டி.
கர்நாடகாவில் வசிக்கும் பழங்குடி மக்கள், அவர்களின் காக்கும் கடவுள் பஞ்சுருளி தெய்வம் என முதல் பாகத்தில் வந்தது போலவே இந்த படத்திலும் ரசிகர்களை கவரும்படியான திரைக்கதை அமைத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. குறிப்பாக் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் VFX காட்சிகள் பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கடந்த 2ம் தேதி வெளியான இப்படம் 9 நாட்களில் 500 கோடி வசூலை தாண்டிவிட்டது. கன்னட படமாக இருந்தும் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இந்த படம் பல கோடிகளை வசூல் செய்திருக்கிறது.
காந்தாரா 2 படத்தின் வெற்றியை கன்னட திரையுலகமே கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அட்லி இப்படத்தை மிகவும் சிலாகித்து பாராட்டி பேசி இருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய அட்லி ‘இந்த படம் வெளியானபோது நான் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டேம் என்கிற இடத்தில் இருந்தேன். அங்கிருந்து இரண்டரை மணி நேரம் பயணம் செய்து சென்று இப்படத்தை பார்த்தேன் படம் அசத்தலாக இருந்தது. எனக்கு ரிஷப் ஷெட்டி நல்ல நண்பர். படத்தை பார்த்தவுடன் அவருக்கு போன் செய்து பாராட்டினேன்.
இந்த படத்தில் அவர் செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. அதை யாராலும் செய்ய முடியாது. ஒரு இயக்குனராக ஒரு விஷயத்தை வெளியே கொண்டு வர முடியும். ஆனால் இந்த படத்தில் அவர் நடிகரும் கூட. எல்லா இயக்குனர்களுக்கும் அவர் இன்ஸ்பிரேஷனாக மாறியிருக்கிறார். அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட வேண்டும்’ என மிகவும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
