Atlee: வீட்டுக்கு வந்த மகாலட்சுமி! இரண்டாவது முறையாக அப்பாவானார் அட்லி

 
Atlee: வீட்டுக்கு வந்த மகாலட்சுமி! இரண்டாவது முறையாக அப்பாவானார் அட்லி

வீட்டுக்கு வந்த மகாலட்சுமி! இரண்டாவது முறையாக அப்பாவானார் இயக்குநர் அட்லி

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, விஜய் நடித்த 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த இவர், கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார். அப்படம் உலகளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அளவிலான இயக்குநராக அட்லி உயர்ந்துள்ளார். தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் ராகா என்ற மிக பிரமாண்டமான படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் அட்லி கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து, இந்த தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தாங்கள் மீண்டும் பெற்றோராகப் போகும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அட்லி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்.

Atlee: வீட்டுக்கு வந்த மகாலட்சுமி! இரண்டாவது முறையாக அப்பாவானார் அட்லி

இந்த நிலையில் இன்று தங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக அட்லி - பிரியா தம்பதி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்த நிலையில், தற்போது தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த அறிவிப்பை அடுத்து, திரையுலக பிரபலங்களும், திரைத்துறையினரும், ரசிகர்களும் இந்த தம்பதிக்கு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web