விஜய்க்கு நான் ஏன் மரியாதை கொடுக்கனும்? பாலாவுக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?

by Murugan |   ( Updated:2024-12-29 06:30:04  )
vijaybala
X

vijaybala

இயக்குனர் பாலா:

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. பல பிரச்சனைகளை தாண்டி இந்த படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமீபத்தில் தான் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதோடு பாலா இந்த சினிமாவிற்குள் வந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு உண்டான மரியாதையும் அந்த இசை வெளியீட்டு விழாவில் கொடுக்கப்பட்டது. அதனால் திரையுலகை சார்ந்த பல முன்னணி இயக்குனர்கள் அந்த விழாவிற்கு வருகை தந்து பாலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இயக்குனர்களுக்கெல்லாம் இயக்குனர் பாலா. அவர் குறைந்தது 10 படங்களுக்கும் குறைவாகத்தான் படங்களை இயக்கியிருப்பார். ஆனால் 25 ஆண்டுகள் ஆன நிலையில் ஏன் நிறைய படங்களை எடுக்கவில்லை என்ற ஒரு கேள்வி பாலா முன் வைக்கப்பட்டது. அதற்கு பாலா அது என்னுடைய சோம்பேறித்தனம் தான் என பதில் அளித்து இருக்கிறார். சோம்பேறித்தனம் என்றால் தூங்கி தூங்கி எழுந்திருப்பது இல்லை. இன்னும் நாட்கள் இருக்கிறதே. அப்பொழுது எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம் என கூறினார் பாலா.

டைட்டிலுக்கான காரணம்:

இந்த வணங்கான் டைட்டிலுக்கு பின்னாடி உள்ள ரகசியம் என்ன என்று கேட்டபோது அந்த படத்தில் உள்ள கதாபாத்திரம் யாருக்குமே வணங்க மாட்டான். உண்மையை மட்டுமே பேசுபவன். வேற எதற்குமே அடிபணிய மாட்டான். இதுதான் அந்த கதாபாத்திரம். அதனால் தான் இந்த டைட்டில் வைக்கப்பட்டது என கூறினார். மேலும் உண்மையிலேயே பாலா வணங்கானா? ஏனெனில் ஒரு விழாவில் ஒரு பெரிய நடிகர் வரும்பொழுது அனைவருமே எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.

ஆனால் நீங்கள் மட்டும் கால் மேல் கால் போட்டு அவரை திரும்பி கூட பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டீர்கள். இது வேண்டுமென்றே நீங்கள் செய்ததா? ஏனெனில் இந்த ஒரு செய்தி அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நடிகரின் பெயரைக் கூட சொல்கிறேன் விஜய் தான். உண்மையில் என்ன நடந்தது என பாலாவிடம் தொகுப்பாளர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டார்.

விஜயை இன்சல்ட் செய்தேனா?

அதற்கு பாலா அது செய்தியாக்கப்பட்டது. வேண்டுமென்றே எல்லாம் அது நடக்கவில்லை. அப்படியே நடந்திருந்தாலும் நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். விஜய் என்னை விட வயதில் சின்னப் பையன். ஏன் எழுந்திருக்க வேண்டும். அப்படி கூட வைத்துக் கொள்ளுங்கள் .இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறேன். ஒரு விழாவில் ஒரு இடத்தில் நான், என்னுடைய மகள் ,விஜய், அவருடைய மனைவி இவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தோம்.

bala

என்னுடைய மகள் அப்போது சின்ன குழந்தை. அவளுக்கு விஜய் யார் என்றே தெரியாது. ஆனால் அவள் தானாக விஜய் மடி மீது ஏறி போய் அமர்ந்து கொண்டாள். உடனே விஜய் அவருடைய செல்போனை எடுத்து என் மகளுடன் செல்பி எடுக்க முயலும் போது என்னை பார்த்து ஒரே ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா எனக் கேட்டார். அதுதான் டிசிப்ளின். இப்படிப்பட்ட ஒரு டிசிப்ளினான நடிகரை நான் பார்த்ததில்லை. அதையும் மீறி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் .இந்த சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் விஜய். இப்படிப்பட்ட அவரை எப்படி நான் வேண்டுமென்றே இன்சல்ட் செய்ய முடியும் என கூறியிருக்கிறார் பாலா.

Next Story