ஹீரோ விஜய் சேதுபதி!.. வெறித்தனமா இறங்கும் பாலா!. ஹிட்டு கொடுத்தே ஆகணும்!..
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வழக்கமான ஹீரோயிசம் செய்யும் நடிகர்களை போல இல்லாமல் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கேமியோ, வில்லன், கடைசி விவசாயி படத்தில் வருவது போன்ற கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிப்பவர்.
அதேபோல், மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்களில் வில்லனாக அசத்தியிருக்கிறார். மகாராஜா வீட்டுக்கு பின் விஜய் சேதுபதிக்கு இன்னும் ஹிட் படம் எதுவும் அமையவில்லை. அடுத்து தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்தான் இயக்குனர் பாலா அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். பாலா போன்ற இயக்குனருக்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர் கிடைத்தால் அந்த படம் அதகளமாக இருக்கும் என இப்போதே எதிர்பார்ப்பு எகிற துவங்கி விட்டது.
இந்த படத்தின் கதை விவாதத்தில் ஏ.எல்.விஜய், ராஜு முருகன், கொம்பன் முத்தையா போன்ற பல இயக்குனர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பாலாவின் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான வணங்கான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்காத நிலையில் அடுத்து ஒரு ஹிட்டை கொடுத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்துள்ள பாலா புதிய படத்தை பக்கா கமர்சியல் மசாலா ஆக்சன் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.
