Categories: Cinema News latest news

விஷாலை குப்பை மேட்டில் படுக்க வைத்த டெரர் இயக்குனர்… இவர் இப்படி பண்ணாம இருந்தாத்தான் அதிசயம்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் பாலா,தன்னுடன் பணியாற்றும் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும், உடல் ரீதியாக மிகவும் டார்ச்சர் செய்வார் எனவும் சினிமா துறையை சேர்ந்த பலரும் கூறியது உண்டு.

சமீபத்தில் சூர்யாவை வைத்து பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படம் டிராப் ஆனதற்கு கூட அப்படி ஒரு காரணம் கூறப்பட்டது. அதாவது சூர்யாவை கிட்டத்தட்ட 8 நாட்கள் ஓடவைத்தாராம் பாலா. இது சூர்யாவுக்கு மிகப்பெரிய எரிச்சலை உண்டாக்கியதாம். ஆதலால்தான் அத்திரைப்படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார் என்று ஒரு தகவல் வெளிவந்தது.

Vanangaan

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் பாலா, நடிகர் விஷாலை குப்பை மேட்டில் படுக்கவைத்ததாக ஒரு தகவலை கூறியுள்ளார்.

கடந்த  2011 ஆம் ஆண்டு விஷால், ஆர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அவன்-இவன்”. இத்திரைப்படத்தில் விஷால் கருவிழி கோளாறு உடைய நபராக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு எந்த ஒரு விருதும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

Avan-Ivan

“அவன்-இவன்” திரைப்படம் உருவாவதற்கு முன் ஆர்யாவை இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்தார் பாலா. அப்போது ஆர்யாவிடம் விஷால், தனக்கு பாலாவின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினாராம். ஆர்யா இந்த விஷயத்தை பாலாவிடம் கூற,  அதற்கு பாலா விஷாலை நேரில் வரச்சொன்னாராம்.

இதையும் படிங்க: அஜித்தை உயர்வாக பேசிய பத்திரிக்கையாளர்… விஜய் ஆஃபிஸில் இருந்து பறந்து வந்த ஃபோன்… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

Bala and Vishal

அப்போது விஷால், தனக்கு குடை பிடிப்பதற்காக ஒருவரையும், தனக்கு தண்ணீர், ஜூஸ் ஆகியவற்றை கேட்டபோதெல்லாம் கொடுப்பதற்காக ஒருவரையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தாராம். விஷால் இவ்வளவு பகுமானமாக நடந்துக்கொள்கிறாரே என்று நினைத்த பாலா விஷாலின் மேல் வெறுப்பானாராம். அந்த வெறுப்பை தணித்துக்கொள்ள “அவன்-இவன்” படப்பிடிப்பின்போது விஷாலை பல மணி நேரம் குப்பை மேட்டில் படுக்கச்சொன்னாராம். மேலும் அந்த குப்பை மேட்டிலேயே சாப்பாடும் சாப்பிட வைத்தாராம்.

Arun Prasad
Published by
Arun Prasad