இயக்குனர் பாலா என்றாலே கூடவே சர்ச்சை பேச்சுக்கள் என்று எழுதிவிடலாம். அந்தளவுக்கு மேடை பேச்சு என்று ஒன்று , மேடைக்கு பின்னால் ஒரு பேச்சு என்று இருக்காது. தனக்கு மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் குணம் கொண்டவர் இயக்குனர் பாலா.
அண்மையில், நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள விசித்திரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இப்படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் எனும் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா கலந்துகொண்டார். இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். பாலாவின் B ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
இதையும் படியுங்களேன் – நான் மிக பெரிய தவறு செய்துவிட்டேன்.! உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்ருதி ஹாசன்.!
அப்போது பேசிய இயக்குனர் பாலா, ‘ இப்படம் மலையாளத்தை விட நன்றாக இருக்கும். படம் நன்றாக இருந்தால் எனது பெயரை போட்டுக்கோ. இல்லையென்றால் வேண்டாம் என சொன்னேன். படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. எனது பெயரை போட்டுக்க சொல்லிட்டேன்.
இப்படம் சுரேஷிற்கு நல்ல படமாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து, உன் மரியாதையை காப்பதிக்கோ. அடுத்தடுத்து எனோ தானோ என படங்களை தேர்வு செய்து கெடுத்துக்கொள்ளாதே.’ என தனது வெளிப்படையான பேச்சை முடித்துவிட்டு சென்றார்.
ஆர்.கே.சுரேஷ் நடித்த முதல் படமே பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் தான். அதில் படம் பார்காதவர்களை கூட மிரட்டிய வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பாலாவின் சினிமா பயணமே ஆட்டம் கண்டுவிட்டது என்றே கூறலாம்.
Vijay TVK:…
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…