செத்த பிணத்தை சூர்யா - சிலிர்த்துப்போன இயக்குனர் பாலா!
தமிழ் சினிமாவின் விசித்திரமான படைப்பாளியான இயக்குனர் பாலா வித்யாசமான கண்ணோட்டத்தில் திரைக்கதைகளை இயக்கி அதை மக்களுக்கு வெளிகாட்டி பிரமிக்க செய்பவர். இப்படி எல்லாம் கூட படத்தை எடுக்க முடியுமா? என ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய கதையையும் கதாபாத்திரத்தையும் அவ்வளவு வித்தியாசமாக சித்தரிப்பவர் .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி சூர்யாவின் நற்குணத்தை பற்றி பேசியிருக்கும் இயக்குனர் பாலா சூர்யா செத்த பிணத்தை கூட பிணம் என்று சொல்லாதவன். அதைக்கூட தப்பு என்று நினைப்பவர். அப்படித்தான் அவரது ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார்.

அவரை பார்ப்பதற்காக நாங்கள் காரில் சூட்டிங் முடிச்சு விட்டு வந்து கொண்டிருந்தபோது வெங்கி இங்கே வந்துவிட்டாராம் என்று கூறினார். வெங்கி என்பவர் இறந்த நபர் அவரை பிணம் என்று கூட சொல்லவில்லை அவரது பாடி என்று கூட சொல்லவில்லை. வெங்கி இங்கு வந்து விட்டாராம் என்று அவ்வளவு மரியாதையாக பேசினார். அவ்வளவு நல்ல குணசாலியான ஹீரோதான் சூர்யா என பெருமை பாராட்டி இருக்கிறார் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் சூர்யா பிதாமகன் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
