Categories: Cinema News latest news throwback stories

அந்த மனைவி வாய்த்தது அவள் செய்த பாவம்… இவளோ நான் செய்த பாக்கியம்! பாலுமகேந்திராவா இப்படி சொன்னாரு!..!

இயக்குனர் பாலுமகேந்திராவின் படங்கள் என்றாலே தனித்துவமானவை. அவர் சிறந்த ஒளிப்பதிவாளர். கதாசிரியர், எடிட்டர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம் முள்ளும் மலரும். 79ல் இவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். மூடுபனி, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம் என 15 படங்கள் இயக்கியுள்ளார்.

இவரது பட்டறையில் உருவான இயக்குனர்களின் பெயரைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அனைவருமே பெரிய ஜாம்பவான்கள் தான். இயக்குனர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி இவர்கள் தான்.

இவர்கள் இயக்கிய படங்களைப் பார்த்தாலே இவர்களது தனித்திறன்கள் பளிச்சிடும். பாலாவின் சேது, ராம் இயக்கத்தில் கற்றது தமிழ், வெற்றிமாறனின் விடுதலை, சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதையும் படிங்க… சரோஜாதேவியை வெளியே போக சொல்லுங்க!.. எம்.ஜி.ஆர் சொன்னதற்கு காரணம் இதுதான்!…

பாலுமகேந்திராவிற்கு மொத்தம் 3 மனைவிகள். முதல் மனைவி அகிலா. இவருக்கு புடவை கூட கட்டத் தெரியாதாம். அவளைத் திருமணம் செய்த போது வயது 18 என்கிறார் பாலுமகேந்திரா. வெகுளியான பெண். புராண காலத்து கண்ணகி, சீதையைப் போன்றவள். இவள் அடக்கம், அமைதி, பொறுமை கொண்டவள். அவள் செய்த பாவம் தான் எனக்கு மனைவியாக அமைந்து விட்டாள் என்றும் இயக்குனர் சொல்வது நெருடலை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க… அவரால அந்த படத்துல என்னால நடிக்கவே முடியல!.. காளிவெங்கட் செல்றத கேளுங்க!..

அதன்பிறகு ஷோபாவைத் திருமணம் செய்ய, அவரோ 17 வயதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவளைப் பற்றி பாலுமகேந்திரா சொல்லும்போது, அவள் ஒரு தேவதை. அந்த வண்ணத்துப் பூச்சி என் தோளிலும் சிறிது காலம் இருந்தது. என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் பறந்து சென்ற அந்த சோகத்தை நான் எப்படி சொல்வது என்கிறார். இப்படியே அவள் 3வதாக திருமணம் செய்தது தான் மௌனிகா. இவரைப் பற்றி பாலுமகேந்திரா இப்படி சொல்கிறார். அவள் மனைவியாகக் கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்துள்ளேன் என்று.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v