உனக்கு ஏன்டா இவ்வளவு குரூர புத்தி?!.. பாலாவை சகட்டுமேனிக்கு திட்டிய இயக்குனர்....

by Murugan |
bala
X

Director Bala: ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் ஒருவர்தான் பாலா. சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்து ரசிகர்களை அதிர வைத்தவர். சேது திரைப்படம் பல ரசிகர்களின் மனதையும் உலுக்கியது. ஏனெனில், இப்படத்தின் கிளைமேக்ஸ் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கல்லூரில் படிக்கும் பெண்ணை மிரட்டி தன்னை காதலிக்க வைப்பார் விக்ரம். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கும் அவரின் மீது காதல் வந்துவிடும். ஆனால், அப்போது தலையில் அடிபட்டு மனநல சிகிச்சை அளிக்கும் மருத்துவனைக்கு சென்றுவிடுவார் விக்ரம். அவரின் நிலை கண்டு அதிர்ந்து போவார் அந்த பெண்.


ஒருகட்டத்தில் பைத்தியம் தெளிந்து அந்த பெண்ணை பார்க்கப்போவார் விக்ரம். ஆனால், அங்கே அந்த பெண் அங்கே தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருப்பார். அவரின் உடல் நடுவீட்டில் வைக்கப்பட்டிருக்கும். அதைபார்த்த விக்ரம் மீண்டும் மனநல மருத்துவமனைக்கே சென்றுவிடுவார்.

அதன்பின் பாலா இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகளும் மனதை உலுக்கும் படியே அமைக்கப்பட்டிருந்தது. எனவே, பாலா படம் என்றாலே மனதை உலுக்கும் என்கிற இமேஜ் ரசிகர்களிடம் உண்டானது. ஒரு பேட்டியில் ‘எனது படத்தின் கிளைமேக்ஸ் ரசிகனின் மனதை உலுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். கிளைமேக்ஸ் இதுதான் என்பதைத்தான் முதலில் முடிவு செய்வேன். மற்ற காட்சிகள் எல்லாம் அதை நோக்கிய பயணம்தான்’ என சொல்லி இருந்தார் பாலா.


இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பாலாவிடம் ‘உங்கள் குருநாதர் பாலுமகேந்திரா சேது படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன பாலா ‘படம் முடிந்ததும் சபை நாகரிகத்திற்காக ‘நல்லவேளை சாகும் முன் இப்படத்தை பார்த்துவிட்டேன்’ என சொன்னார். அவர் ஏன் அப்படி என்னார் என யோசித்து கொண்டிருந்தேன்.

அதன்பின் என்னை அவரின் ஆபிசுக்கு வர சொன்னார். நான் உள்ளே போனதும் ‘உனக்கு ஏன்டா இவ்வளவு குரூர புத்தி?.. ஒன்னும் தெரியாத ஒரு காலேஜ் பொண்ண, அதே காலேஜில் படிக்கிற ரவுடியை காதலிக்க வச்சி, அவளை மிரட்டி சம்மதிக்க வச்சி, அதுக்கு அப்புறம் அவனுக்கு ஒன்னு ஆகி, அந்த பொண்ணும் செத்து போயி, அந்த பொண்ணோட வாழ்க்கையும் போய், அவனோட வாழ்க்கையும் போய். எதுக்கு இப்படி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்க?.. உன் மனசுல ஏன் இப்படி ஒரு குரூரம். அந்த பொண்ணுக்கு ஒரு முறைப்பையனும் இருக்கான். அவனோட சந்தோஷமா வாழட்டும்னுதான விட்ருக்கணும். உனக்கு ஒரு பொண்ணு இருந்தா அவளை நீயே கழுத்த நெரிச்சி கொல்லுவியா’ என கடுமையாக திட்டினார்’ என பாலா பகிர்ந்துகொண்டார்.

Next Story