வடிவேலுக்கு அந்த தகுதி இல்லை- இப்படி பொசுக்கு சொல்லிபுட்டாரே பாரதி கண்ணன்
வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். என் ராசாவின் மனசிலே படம் மூலம் அறிமுகம் ஆன அவர் தொடர்ந்து சின்ன கவுண்டர் , தேவர் மகன் என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் இவருக்கு வாய்ப்புகளை தொடர்ந்து கொடுத்து வந்தார். கவுண்டமணி வேண்டாம் என்று கூறியும் விஜயகாந்த வடிவேலுவுக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் விஜயகாந்துடன் எற்பட்ட பகை காரணமாக அவரை கடுமையாக விமர்சித்து வந்தார். அதற்கு பலனாக திரையுலகை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார் வடிவேலு.
பொதுவாகவே வடிவேலுவின் நடவடிக்கைகளை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.யாரையும் மதிப்பதில்லை, ஆரம்ப காலங்களில் தன்னுடன் இருந்தவர்களை சீண்டுவதேயில்லை என்று பல குற்றச்சாட்டுகள் உண்டு.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பார்தி கண்ணன் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது, விவேக், மயில்சாமி, விஜய்காந்த், போண்டாமணி என இப்படி யார் இறப்பிற்கும் வடிவேலு வருவது கிடையாது. ஒரு சம்பிரதாயத்திற்காவது ஒரு பேட்டியாவது அவர் கொடுக்கலாம். ஆனால் அதும் செய்வது இல்லை. சில நேரங்களில் நம்முடைய தகுதி, நிலை அறிந்து வார்த்தைகளை விடவேண்டும். அதற்கு வடிவேலு பெரிய உதாரணம். வடிவேலுவுக்கு துக்க நிகழ்வில் கலந்துகொள்ள பாக்கிய்ம் இல்லை என்பதை விட தகுதி இல்லை என்றுதான் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.
பாரதி கண்ணனின் கார்த்திக் குறித்த சமீபத்திய பேட்டி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
