
Cinema News
கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்குக் கிடைத்த வெங்கடாஜலபதி தரிசனம்…ஆச்சரியம் ஆனால் உண்மை..!
Published on
தமிழ்த்திரை உலகின் வெற்றிகரமான இயக்குனர் இவர். எம்ஜிஆர், சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் பீம்சிங். இவர் நடிகர் திலகத்தைப் பற்றி தனது கருத்துகளை இவ்வாறு பகிர்கிறார்.
சிவாஜி நடித்த முதல் படம் முத்தான படம் பராசக்தி. இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு ஒரு போட்டோவைக் காட்டினார். இவர் தான் நம் படத்தின் ஹீரோ. கணேசன். பக்;கத்து அறையில் தான் இருக்கிறார். பாருங்கள் என்றார்.
பக்கத்து அறைக்கு சென்றேன். உள்ளே கட்டிலில் அமர்ந்து இருந்தார் கணேசன். மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சொந்த அறிமுகத்துக்குப் பின் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதுதான் எங்களது முதல் சந்திப்பு.
அப்போது அவர் தீவிர தி.க. நானோ காங்கிரஸ் அனுதாபி. முற்றிலும் நேர்மாறான கொள்கைகள். கணேசனின் திரைப்பட நடிப்புக்குத் தொடக்கமாக முதலில் மூவி டெஸ்ட் எடுத்தோம்.
பராசக்தி நாடகத்தின் வசனங்களையே அவருக்குக் கொடுத்து நடிக்க வைத்தோம். அது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. பராசக்தி படப்பிடிப்பை உடனே ஆரம்பித்தோம். பராசக்தியில் சக்ஸஸ் என்ற வார்த்தை தான் சிவாஜி பேசும் முதல் வசனம். படமாக்கினோம். திரை உலகில் கணேசன் நடித்த முதல் காட்சி.
parasakthi
வெற்றி என்ற வார்த்தையுடன் ஆரம்பமான அவரது திரை உலக வாழ்க்கையில் அன்று முதல் வெற்றிப் பயணம் தொடங்கி விட்டது. காவேரி படத்தின் போது ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜா ராணி படமும் அப்போது தான் நடந்து கொண்டு இருந்தது. என் சகோதரர் திருப்பதியில் இருந்தார். நான் திருப்பதிக்குப் போகப் போறேன் என்று சொன்னேன்.
நானும் வருகிறேன் என்றார் அவர். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சி. கோவிலுக்குப் போகும் பழக்கம் இல்லாதவர்..அதனால் தான் அந்த அதிர்ச்சி எனக்கு. நான், காமிரா விட்டல், ஒளிப்பதிவாளர் லோகநாதன், கணேசன் நால்வரும் திருப்பதிக்குக் கிளம்பினோம்.
என் சகோதரருக்கு நான் வருவதாக முன்பே போன் செய்து விட்டேன். முதல் நாள் பிற்பகல் புறப்பட்ட நாங்கள் அடைமழை….பெரு வெள்ளம் வர…அதையும் மீறி…மறுநாள் காலை 4 மணிக்கே திருப்பதிக்குப் போய்ச் சேர்ந்தோம். என் சகோதரரோ நேரம் ஆக ஆக வழியில் என்ன நடந்து விட்டதோ என் பதறிப் போய் விட்டார்.
குளித்து விட்டு உடனே கோயிலுக்குச் சென்றோம். மார்கழி மாதத்தின் பனி எங்களை உறையச் செய்து விடும் போலிருந்தது. கோயிலின் பிரதான வாயிலில் தரிசனத்துக்காக நின்றோம். கணேசன் என் அருகில் நின்றார்.
வெங்கடாஜலபதியின் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத காட்சி. என் சரித்திரத்தில் முக்கியமான இடம் அது. இதை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்றார் கணேசன்.
Sivaji and Beemsingh
இயற்கையிலேயே அவருக்கு ஒரு பற்று ஏற்பட்டு விட்டது. கணேசன் எங்களை பீம்பாய் என்று அன்புடன் அழைக்க ஆரம்பித்தார். கணேசனை அவரது ஆரம்ப நாள்களிலிருந்து அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
அவரிடம் கற்க வேண்டியவை பல இருக்கின்றன. யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் மேல் பரிதாபம் கொள்வதைப் போல காட்ட மாட்டார். ஆனால் ஆச்சரியப்படத்தக்க அளவில் உதவி செய்வார். இது அனுபவப்பூர்வமான உண்மை.
Idli kadai: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
Vijay: கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41...
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50...
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...