தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. முதல் திரைப்படத்திலேயே மிகவும் பிரபலமானார் பாரதிராஜா.
அந்த திரைப்படம் நடிகர் ரஜினிக்கும் முக்கியமான படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் அவருடைய காலக்கட்டத்திலேயே பெரும் விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய கதைகளத்தை தேர்ந்தெடுத்து படமாக்கியுள்ளார் பாரதிராஜா. அதனாலேயே பாரதிராஜாவின் மீது அப்போது சினிமா வட்டாரத்தில் பெரும் மரியாதை இருந்தது.
bharathiraja
அதே போல சினிமாவில் பலருக்கும் வாய்ப்பளித்துள்ளார் பாரதிராஜா. பாக்கியராஜ், மனோபாலா போன்றோருக்கு இவர்தான் வாய்ப்பளித்தார். பல கதாநாயகிகளுக்கும் கூட பாரதிராஜா வாய்ப்பளித்திருக்கிறார். கதாநாயகிகளை பாரதிராஜா எப்படி தேர்ந்தெடுப்பார் என்பதற்கு ஒரு பிரபலமான வதந்தி அப்போது உலா வந்தது.
புரளியை உண்மையாக்கிய சம்பவம்:
படத்திற்கு கதாநாயகி வேண்டும் என்றால் பாரதிராஜா பள்ளி, கல்லூரிகளின் வாசலில் போய் நிற்பாராம். அங்கு வரும் பெண்களில் கதாநாயகிக்கு ஏற்ற அம்சத்துடன் இருக்கும் பெண்களை நடிக்க விருப்பம் உள்ளதா? என கேட்பாராம்.
நடிகை ரேவதியை மண்வாசனை திரைப்படம் மூலமாக பாரதி ராஜாதான் அறிமுகப்படுத்தினார். இதுக்குறித்து ஒரு பேட்டியில் ரேவதி கூறும்போது “நான் 11 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கம் காரில் வந்த பாரதிராஜா என்னை பார்த்தார். அதன் பிறகு எனது வீட்டிற்கு வந்து நான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என கேட்டார்” என கூறியுள்ளார்.
உண்மையிலேயே பாரதிராஜா பள்ளி, கல்லூரி வாசல்களில் நின்றுதான் கதாநாயகிகளை தேடியிருக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது..
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் நடித்து பாதியிலே நின்ற படம்!.. அட என்ன காரணம் தெரியுமா?….
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…