Categories: Cinema News latest news

15 வருஷ பகை.. பாரதிராஜாவுக்கு யாருமே பொண்ணு கொடுக்கல… எப்படி நடந்தது தெரியுமா அவரது கல்யாணம்?..

தமிழ் சினிமாவில் கிராமத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள், பிரச்சினைகள் , என அனைத்தையும் எதார்த்தமாக எடுப்பதில் வல்லவர். மேலும் தன் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அவரே சொல்லிக் கொடுத்தும் நடிக்க சொல்லுவார்.

வெட்கம், கோபம், அழுகை என எல்லாவற்றையும் அவரே நடித்துக் காட்டி சொல்லிக் கொடுப்பார். சினிமாவிற்குள் வருவதற்கு முன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம் பாரதிராஜா. நடிப்பு, நாடகம் என மேடையில் சுற்றிக் கொண்டிருப்பதால் பாரதிராஜாவுக்கு யாரும் பொண்ணே கொடுக்கவில்லையாம்.

bharathuraja

சினிமாவில் இருக்கிறான் என்று கருதியே அவருக்கு யாரும் பெண் தர மறுத்து விட்டார்களாம். இதனால் மிகவும் விரக்தியடைந்த பாரதிராஜா அவரது தாயாரிடம் வந்து இனிமேல் எனக்கு கல்யாணமே நடக்காது என கூறி விரக்தியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் வீட்டிற்கு எதிரே பாரதிராஜாவின் அத்தை வீடு இருந்ததாம்.

இதையும் படிங்க : வயதான நடிகர்கள் இளம் வயது கதாநாயகிகளுடன் நடிப்பது ஏன் தெரியுமா?? ஒரு வேளை இதுதான் உண்மையோ!!

அது யார் என்றால் வானவில், வண்டிச்சோலை சின்னராசு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மனோஜ் குமாரின் அம்மாதான் பாரதிராஜாவின் அத்தை. பாரதிராஜாவின் குடும்பத்தாருக்கும் அவரின் அத்தை வீட்டாருக்கும் கிட்டத்தட்ட 15 வருட பகை இருந்ததாம். வீட்டெதிரே தனத் மருமகன் புலம்புவதை பார்த்துவிட்டு நேராக அவர் வீட்டிற்கு சென்றாராம்.

manojkumar

உனக்கு யார் பொண்ணு கொடுக்கலைனாலும் பரவாயில்லை. நான் என் மகளை கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் இயக்குனர் மனோஜ் குமாரின் அக்காதான். ஆனால் மனோஜ்குமாரின் அப்பாக்கும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையாம். ஆனால் தன் அண்ணன் மகன் கஷ்டப்படுவதை பார்த்து தாங்கமுடியாமல் தன் மகளை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார் மனோஜ்குமாரின் தாய். இதை ஒரு பேட்டியில் இயக்குனர் மனோஜ் குமார் கூறியிருந்தார்.

Published by
Rohini