பாரதிராஜாவின் ஒருதலை காதல் - யார் அந்த பெண்மணி!

 
bharathiraja

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10ம் தேதி மரணம் அடைந்தார். நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள் .

அதன் பிறகு பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து அரசு மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பாரதிராஜாவை குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 

bharathiraja

அந்த வகையில் பாரதிராஜா பல மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய ஒருதலை காதல் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பாரதிராஜா 9ம் வகுப்பு  படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்தேன் அது அவருக்கே தெரியாது. கடைசிவரை நான் அவரிடம் சொல்லவும் இல்லை வருடங்கள் பல கணிந்த பிறகு ஒரு நாள் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பூக்கடையில் பின்பக்கமாக திரும்பி நின்று கொண்டிருந்து ஒரு பெரிய ஜடை அது முழுக்க நரைமுடியுடன் இருந்தார் .

அது அவர்தான் என்று நான் என் தங்கையிடம் சொன்னேன் உடனே அவள் ஷாக் ஆகிவிட்டார். பிறகு அந்தப் பெண் திரும்பிய போது நான் கூறிய அதே என்னுடைய பழைய காதலிதான்... உடனே என் தங்கை நீங்கள் இவ்வளவு வருடம் கழித்து எப்படி இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று ஷாக் ஆனாள். அதுதான் காதலின் ஆழம் காதலின் அழகு என பாரதிராஜா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கே இந்த மாதிரி ஒரு ஒருதலை காதல் இருந்ததா என ரசிகர்கள் வியப்படைந்துவிட்டனர். 

Tags

From Around the web