சொந்த காசு போட்டு எடுத்த 2 படங்கள்!. பாரதிராஜா கையை சுட்ட கார்த்திக் படம்!..
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் பாரதிராஜா. திரைப்படங்கள் ஸ்டுடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த காலத்தில் கிராமம், கள்ளிக்காடு, வாய்க்கால் வரப்பு ஆகிய இடங்களுக்கு சென்று பாரதிராஜா திரைப்படங்களை உருவாக்கினார். அவருக்கு பின் வந்த பல இயக்குனர்களுக்கும் முன்னோடியாக பாரதிராஜா இருக்கிறார்.
கடந்த 10ம் தேதி அதிகாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் அவர் காலமானார். அவரின் உடல் நேற்று அவரின் விருப்பப்படியே தேனிமாவட்டம் வத்லகுண்டு பகுதியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு அவருக்கு அரசு மரியாதையும் கொடுத்து கவுரவித்தது.
பாரதிராஜா இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். சில படங்களை அவர் தயாரித்திருக்கிறார். அதில், முதல் மரியாதை, நாடோடி தென்றல் ஆகிய இரண்டு படங்களின் எடுப்பதற்காக பாரதிராஜா தனது சொத்துக்களை அடமானம் வைத்தார். முதல் மரியாதை அவருக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால் நாடோடி தென்றல் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது. இதை பாரதிராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
