படத்தின் தோல்வியையே தாங்க முடியாதவர்.... 3 நாள் APOLLOவில் !

 
kallukkul eeram

 

பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் பாரதிராஜாவின் நண்பர்கள் உள்ளிட்டோர் பாரதிராஜாவை குறித்த தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் "கல்லுக்குள் ஈரம்" படத்தை தானே இயக்கி தயாரித்த பாரதிராஜா அந்த படத்தின் தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். அந்த அளவுக்கு ஒரு படத்தின் தோல்வியையே அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இருக்கையில் அவரது மகனின் மரணம் மிகப்பெரிய மனவேதனையும் வலியையும் கொடுத்தது. அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை அவரது நண்பர் கூறியுள்ளார். 

bharathiraja

நுரையீரல் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக இயக்குனர் பாரதிராஜா கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று காலமானார். அவரது உடல் ஜூன் 11ஆம் தேதி தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் தேனி மாவட்டம் காங்கவர் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

Tags

From Around the web