சிகரம் தொட்ட இயக்குனர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு - இத்தனை கோடிகளா!
Jun 10, 2026, 18:00 IST
இயக்குனர் பாரதிராஜாவின் மறைவையொட்டி திரைத்துறையை சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாரதிராஜா குறித்து செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது .
பாரதிராஜாவின் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பும் திரை துறையில் அவர் சாதித்த சாதனைகள் குறித்தும் தொடர்ச்சியாக செய்தி தொகுப்புகளாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பாரதிராஜாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிகரத்தையே தொட்ட இயக்குனர் சிகரத்தின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 80 கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
