×

சிம்புவிடம் இருந்து 10 கோடி வாங்கிய இயக்குனர்… செம்ம பிளான் போட்டி ஷுட்டிங்!

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கும்  படத்தினை சிம்புவே தயாரிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கும்  படத்தினை சிம்புவே தயாரிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்துக்கு இடையில் சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது. இந்த படத்தை சுசீந்தரன் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை சிம்புவே தயாரிப்பதால் தன் சம்பளம் இல்லாமல் படத்தின் இதர செலவுகளுக்கு மொத்தமாக 10 கோடி ரூபாயை சுசீந்தரனிடம் கொடுத்து விடுவாராம். அந்த தொகையை வைத்துக்கொண்டு முதல் காப்பி அடிப்படையில் சுசீந்தரன் படத்தை எடுத்து சிம்பு கையில் கொடுத்து விட வேண்டும். இதன் மூலம் படத்தின் செலவை குறைத்து தன் சம்பளத்தை விட அதிகமான தொகையை பெற திட்டமிட்டுள்ளாராம் சுசீந்தரன்.

From around the web

Trending Videos

Tamilnadu News