திவாகரை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!.. இயக்குனர் சேரன் கோபம்...
நான் சிவாஜி மாதிரி நடிப்பவன் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு, தனக்குத்தானே வாட்டர்மெலன் ஸ்டார் என பட்டம் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ட்ரோல் செய்யும்படியான வீடியோக்களை வெளியிட்டு வரும் திவாகர் சமீபத்தில் சேரன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்கேயும் அவர் கோமாளித்தனமாக எதையோ செய்ய அதை பார்த்த சேரம், மற்றும் அங்கு விருந்தினராக வந்திருந்த மைம் கோபி இருவரும் திவாகருக்கு அறிவுரை செய்தனர். அப்போது அமைதியாக இருந்த திவாகர் சில நாட்கள் கழித்து சேரனும், மைம் கோபியும் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும், அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் தனது ரசிகர் மன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.. மேலும், சேரனின் படைப்புகளையும் அவர் கீழ்த்தரமாக விமர்சித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சேரன் ‘ திவாகரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று எனக்கு தெரிந்தது.. சிலர் நான் அவரை அனுமதித்திருக்கக் கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா?’ எனவும் கேட்கிறார்கள்.
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் நான் இல்லை.. அவனை சரி செய்து விடமாட்டோமா.. இப்படியே விட்டால் எங்கேயாவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் போய்விடும் என நினைப்பவன் நான்.. அவர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்து விடப் போகிறதா? ஒருவேளை அவரை நான் வெளியேற்றியிருந்தால் ‘சேரன் இப்படி செய்யலாமா?’ என்று கேட்பார்கள்.. நான் அங்கு நடந்தது மனிதாபிமானமே.. அது மற்றவர்களுக்கு புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை’ என கூறியிருக்கிறார்.
