5 கோடி ஃபைன் கட்டு.. ரஜினிகாந்த் படத்தை இயக்க முடியாமல் தவிக்கும் டான் டைரக்டர்!.. இதான் காரணம்?
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு டான் திரைப்படம் வெளியானது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் 100 கோடி வசூல் படமாக மாறியது. ஆனால், அந்த படத்தின் இயக்குநருக்கு அதன் பின் எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் சுமார் 4 ஆண்டுகள் ஆபீஸில் சேரை தேய்த்துக் கொண்டிருந்தவருக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல கமல் தயாரிப்பில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சி வெளியேறிய நிலையில், கிடைத்தது.
ஆனால், தற்போது அந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் சிபி சக்கரவர்த்திக்கு பெரிய பிரச்சனை வந்துள்ளதாக கூறுகின்றனர். டான் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டான் 2 படத்தை இயக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் ஓடின.
மேலும், தெலுங்கில் ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்துக்காக பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிவிட்டார் என்றும் கூறினர். ஆனால், ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த தெலுங்கு படத்தில் இருந்து விலகி விட்டார்.
அதுமட்டுமின்றி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டாராம். ஆனாலும், என்ன பிரச்னைப்பா என்று பார்த்தால், அட்வான்ஸ் பணம் ஓகே, படத்தின் ப்ரீ புரொடக்ஷனுக்காக நாங்க செலவு பண்ண 5 கோடியை கொடுத்துவிட்டு கம்பியை நீட்டுன்னு சொல்லிட்டாங்களாம் பட நிறுவனம். ரஜினி பட வாய்ப்புக் கிடைத்தாலும், கமல் தரப்பில் இருந்து பெரிய சம்பளம் எல்லாம் பேசப்படவில்லை என்கின்றனர். இதனால், 5 கோடி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதால் ரஜினி படத்தை ஆரம்பிக்க முடியாமல் தவித்து வருகிறார் என்கின்றனர். எப்படி இருந்தாலும், ரஜினி, கமல் தலையிட்டு சிபி சக்கரவர்த்தியின் பஞ்சாயத்தை பைசல் பண்ணிவிடுவார்கள் என்றே தெரிகிறது.
