அதர்வாவுடன் கூட்டணி...மீண்டும் போலீஸ் கதையை கையில் எடுக்கும் ஹரி!
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் ஹரி. சாமி , சிங்கம் , ஆறு , வேல் , தாமிரபரணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக போலீஸ் கதைகளை விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இறுதியாக இவர் இயக்கிய அருண் குமார் நடித்த யானை, விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் ஆகிய ப்படங்கள் பெரிதும் கை கொடுக்கவில்லை.
இந்நிலையில், ஹரி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே போலீஸ் கதைகளை மையமாக வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, இந்த முறையும் அதிரடி ஆக்ஷன் கதையைத் தேர்வு செய்துள்ளாராம்.
இப்படத்தின் கதை உருவாக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. அதர்வா - ஹரி கூட்டணி முதன்முறையாக இணையவுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதால் இப்படம் ம்மீது இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
