Categories: Cinema News latest news throwback stories

இயக்குனர் ஹரி என்னை ஏமாற்றி அதை செய்ய வைத்துவிட்டார்… புலம்பும் பிரபல சீரியல் நடிகை…

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த- 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “சிங்கம்”. இந்த திரைப்படம் தமிழை தாண்டி பல்வேறு மொழிகளின் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த திரைப்படத்தில், ஒரு காட்சியில் ஒரு பெண் குற்றவாளியை சூர்யா பிடிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அந்தப் பெண் சூர்யாவை மாற்றி விடுவதற்காக வந்து இருப்பார் அதனை சூர்யா அந்த பெண்ணை புத்திசாலித்தனமானாக கண்டுபிடித்து விடுவார்.

அந்த காட்சிகள் நடித்த அவர் வேறு யாரும் அல்ல மெட்டி ஒலி எனும் பிரபல சீரியல் மூலம் பிரபலமாக இருந்த வனஜா தான்.

இதையும் படியுங்களேன்- என்னை மன்னிச்சிருங்க.. வருத்தத்துடன் கூறிய கமல்.. பெருந்தன்மையாக நடந்துகொண்ட ஹரி…

இவர் ஒரு நேர்காணலில் குறிப்பிடும் போது “இயக்குனர் ஹரி முதலில் என்னிடம் இந்த கதாபாத்திரம் இதுதான் என்று முழுமையாக சொல்லவில்லை. அங்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிறகுதான் பான் பராக் போட்டிருபது போல இருக்க வேண்டும் என்று கூறினார்கள் . நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அங்கு தான் எனது கணவரும் வேலை செய்து வந்தார்.

பிறகு, ஏதோ சொல்லி என்ன சமாதானப்படுத்தி அந்த காட்சி நடிக்க வைத்தார்கள். என்னிடம் ஒழுங்காக அந்த கதாபாத்திரம் சொல்லாமல் ஏமாற்றி தான் இயக்குனர் ஹரி அந்த காட்சியை படமாக்கி இருந்தார்.

அந்த படம் வெளிவந்த பிறகு அந்த காட்சியை பார்த்த பலரும் என்னிடம் ஏன் இந்த படத்தில் இப்படி நடித்தீர்கள் என்று கேட்டு கொண்டு வந்தார்கள். ஆனாலும், இந்த திரைப்படத்திற்குப் பிறகு பலருக்கு என்னை நன்கு தெரிந்த முகமாக மாற்றியது. என அந்த நேர்காணலில் மெட்டி ஒலி வனஜா தெரிவித்து இருந்தார்.

Manikandan
Published by
Manikandan