×

தனுஷைக் கவர்ந்த இயக்குனர்… அடுத்த பட வாய்ப்பு!

நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராக்கி என்ற படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமார ராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். ராக்கி படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதன் போஸ்டர்களும் டிரைலரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் அருண் தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இயக்கும் சாணிக் காயிதம் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தனுஷின் 46 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். அவர் சொன்ன ஒருவரிக் கதை பிடித்ததை அடுத்து இந்த வாய்ப்பை தனுஷ் அவருக்குக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News