Categories: Cinema News latest news throwback stories

சிவாஜி, எம்ஜிஆருக்கே டஃப் கொடுத்த இயக்குனர்!.. தனக்கென ஒரு பாணியில் வெற்றி வாகை சூடிய அந்த பிரபலம்..

அன்றைய காலகட்டத்தில் சிவாஜி , எம்ஜிஆர் என்றால் சினிமாவே நடுங்கும். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் தங்கள் அனுபவத்தாலும் நடிப்புத் திறமையாலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தனர். இவர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டிகள் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வார்கள்.

mgr sivaji

அதே நேரத்தில் தொழில் என்று வந்து விட்டால் இருவருக்குள்ளும் அந்த ஆரோக்கியமான போட்டிகள் தொடங்கி விடும். எம்ஜிஆரை வைத்து படமெடுத்த எந்த இயக்குனருக்கும் சிவாஜியும் சிவாஜியை வைத்து படமெடுத்த எந்த இயக்குனருக்கும் எம்ஜிஆரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். சிவாஜிக்கு இவர் தான் , எம்ஜிஆருக்கு இவர் தான் என அந்த கால சினிமா ஒரு ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிறது.

அதே சமயம் இருவர்களின் படங்களும் பெரும்பாலும் வசூலை அள்ளி தெளித்தது. ஒரு அசைக்க முடியாத ஜாம்பவான்களாக வலம் வந்தார்கள். ஆனால் இவர்களுக்கு ஈடாக தன் படங்களின் மூலம் சிவாஜி, எம்ஜிஆருக்கும் டஃப் கொடுத்த இயக்குனர் யாரென்றால் அது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தான்.

ks gopalakrishnan

ஒரு பக்கம் சிவாஜி, எம்ஜிஆர் என்று முடி சூடா மன்னர்களாக வலம் வர சின்ன சின்ன நட்சத்திரங்களை வைத்து அவர்களின் படங்களுக்கு ஈடாக கே.எஸ். கோபாலகிருஷ்ணனும் பெரிய பெரிய வசூல் படங்களை வாரி இறைத்தார். இவரின் படங்கள் பெரும்பாலும் பெண்களின் எண்ண ஓட்டத்தை மையமாக வைத்து அமைந்திருக்கும்.

ஒரு சின்ன விஷயத்தை பிடித்துக் கொண்டு அதன் மூலம் திரைக்கதையாக்குவதில் வல்லவர் கே.எஸ்.ஜி.குடும்ப படங்களை எடுப்பதில் அந்த காலத்தில் வல்லவராக விளங்கினார் பீம்சிங். ஆனால் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் முன்வைக்கும் குடும்ப படங்களாக எடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கே.எஸ்.ஜி.

ks gopala krishnan

சிவாஜி, எம்ஜிஆருக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது என்ற நிலையில் இருந்த தமிழ் சினிமா கே.எஸ்.ஜி. வந்த பிறகு அவரின் கதைகள் அந்த எண்ணத்தை உடைத்தன. இந்த சுவாரஸ்ய தகவலை தயாரிப்பாளர் கே.எஸ்.ஸ்ரீநிவாசன் கூறினார்.

இதையும் படிங்க : அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த பங்கம்… மிர்ச்சி சிவா எடுத்த அதிரடி முடிவு..

Published by
Rohini