
Cinema News
வாரிசு நடிகரை வைத்து பையா 2 எடுக்கும் லிங்குசாமி?!.. கார்த்தி, ஆர்யா என்னாச்சி?….
Lingusamy: ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இவரின் முதல் படத்தை பார்த்துவிட்டு இவரும் விக்ரமன் போல வருவார் என பலரும் எதிர்பார்க்க, அடுத்து ரன் எனும் அதிரடி ஆக்சன் படத்தை கொடுத்தார். . அடுத்த விஷாலை வைத்து இவர் இயக்கிய சண்டக்கோழி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விஷாலின் கெரியரில் இது ஒரு முக்கியமான படமாக பார்க்கப்பட்டது.
சண்டக்கோழி படத்திற்கு பின் லிங்குசாமிக்கு சூப்பர் ஹிட் அமையவில்லை. அஜித்தை வைத்து ஜி, சூர்யாவை வைத்து அஞ்சான் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் ஹிட் அடிக்கவில்லை. தெலுங்கில் சென்று ஒரு படத்தை இயக்கினார். அந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை. கடந்த சில வருடங்களாக லிங்குசாமி எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
ஒருபக்கம் சில வருடங்களாகவே பையா 2 படத்தை இயக்கும் முயற்சியில் லிங்குசாமி ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
துவக்கத்தில் முதல் பாகத்தில் நடித்த கார்த்தியை இந்த படத்திலும் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. அதன்பின் கார்த்தி இல்லை.. ஆர்யா நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. அதன்பின் அவர்கள் இருவரும் இல்லை.. அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி இந்த படத்தில் நடிக்க போகிறார் என சொன்னார்கள். தற்போது இது தொடர்பாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த வித்யாசாகரின் மகன் ஹர்ஷாவர்தன் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை லிங்குசாமி இயக்கப்போகிறார். இந்த படத்தை மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பையா படத்தைப் போலவே இதுவும் பயணத்தை மையமாகக் கொண்ட காதல் கதை என சொல்லப்படுகிறது. எனவே, இது பையா 2 என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.