எத்தனை லிட்டர் ரத்தம் செலவாச்சுன்னு தான் தெரியல!.. மிரட்டி விட்ட லோகேஷ்.. டிசி டிரைலர்!..

 
எத்தனை லிட்டர் ரத்தம் செலவாச்சுன்னு தான் தெரியல!.. மிரட்டி விட்ட லோகேஷ்.. டிசி டிரைலர்!..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ‘டிசி’ திரைப்படத்தின் டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால், சர்வதேச அளவிலும் இப்படத்திற்கு கவனம் அதிகரித்துள்ளது.

எத்தனை லிட்டர் ரத்தம் செலவாச்சுன்னு தான் தெரியல!.. மிரட்டி விட்ட லோகேஷ்.. டிசி டிரைலர்!..

‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, கூலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும், வன்முறை மற்றும் தனித்துவமான காட்சியமைப்புகளுக்குப் பெயர் பெற்ற அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குவதால், ‘டிசி’ திரைப்படம் வேற லெவல் அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

வெளியான டிரெய்லரில் லோகேஷ் கனகராஜ் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காணப்படுகிறார். நீண்ட முடி, அடர்ந்த தாடி, கையில் கத்தி என அவரது கெட்டப் ரசிகர்களை மிரட்டுது. எத்தனை லிட்டர் ரத்தம் செலவானது தான் தெரியல என ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர். லோகேஷுக்கும் அருண் மாதேஸ்வரனுக்கும் இதை தவிர வேறு எதுவும் தெரியாது என்கின்றனர். அதேசமயம், வாமிகா கபியும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் ஈர்த்துள்ளார். டிரெய்லர் முழுவதும் காதல், வன்முறை, உணர்ச்சி மற்றும் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

எத்தனை லிட்டர் ரத்தம் செலவாச்சுன்னு தான் தெரியல!.. மிரட்டி விட்ட லோகேஷ்.. டிசி டிரைலர்!..

‘டிசி’ என்ற தலைப்பு, படத்தில் வரும் தேவதாஸ் மற்றும் சந்திரா கதாபாத்திரங்களின் பெயர்களை குறிக்கும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ கதாபாத்திரத்திலும், வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காதல்-ஆக்ஷன் திரைப்படம் ஒரு புதிய அனுபவத்தை தரும் வகையில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், டிசி படத்தின் டிரெய்லர் வெளியாகிய சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்கள் சொதப்பியது போல இந்த படம் சொதப்பிவிடக் கூடாது என்கின்றனர்.

From Around the web