நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் பிறந்ததினம் இன்று

தமிழ் திரைப்பட உலகில் நடிகராக, இயக்குநராக, வசன கர்த்தாவாகத் தன் முத்திரையைப் பதித்தவர் மணிவண்ணன். திரையில் தனது இயல்பான நடிப்பினாலும்
 
manivannan

தமிழ் திரைப்பட உலகில் நடிகராக, இயக்குநராக, வசன கர்த்தாவாகத் தன் முத்திரையைப் பதித்தவர் மணிவண்ணன். திரையில் தனது இயல்பான நடிப்பினாலும், நையாண்டி கலந்த அரசியல் வசனங்களாலும் ரசிகர்களைக் கவர்ந்த அதே வேளையில், திரைக்குப் பின்னால் கூர்மையான அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகளை கொண்ட மனிதராக விளங்கினார்.

manivannan

கிழக்கே போகும் ரயில் படம் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பயணத்தொ தொடங்கிய மணிவண்ணன்  நிழல்கள் ,  அலைகள் ஓய்வதில்லை ,  காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். 1982ம் ஆண்டு மோகன், ராதா, சுஹாசினி நடிப்பில் வெளீயான கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார்.  தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர்  காதல், குடும்பம், சமூகப் பிரச்சனை, திரில்லர் என அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக அமைதிப்படை இவரது அரசியல் னையாண்டி படத்திற்கு மிகப்பெரிய சான்றாகும். இனிமை இதோ இதோ',  24 மணி நேரம் ,  நூறாவது நாள் , ஜல்லிக்கட்டு , சின்னத் தம்பி பெரிய தம்பி போன்ற திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

manivannan

அரம்ப கட்டத்தில் கொடிப்பறக்குது உள்ளிட்ட படங்களில் மணிவண்ணன் நடித்திருந்தாலும் 90களுக்கு பின் அவர் பிஸியான நடிகராகவே மாறினார். மணிவண்ணன் வெறும் சினிமா கலைஞர் மட்டுமல்ல; அவர் ஒரு தீவிர சமூகச் சிந்தனையாளர். பெரியாரியக் கொள்கைகளில் ம்ிக்குந்த பற்றுக்கொண்டவர். தமிழ் மொழி, தமிழ் உணர்வு மற்றும் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவர். திரையிலும் திரைக்கு வெளியிலும் தனது கொள்கைகளில் உறுதியாக நின்றவர். 

இன்று மணிவண்ணனின் பிறந்த நாள். அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றாலும் அவரது படைப்புகள் மூலம் நம்மிடையே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

Tags

From Around the web