Categories: Cinema News latest news throwback stories

ரஜினிக்காக கலைஞரின் படத்தை இயக்க மறுத்த இயக்குனர்!..கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் கலைஞரின் கைவண்ணத்தில் எக்கச்சக்க கதைகள் காவியங்களாகப்பட்டிருக்கின்றன. எத்தனையோ படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருந்தாலும் நம் மனதில் முதலில் வந்து நிற்பது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படம் தான்.

rajini

அந்த படத்தில் அமைந்த ஒவ்வொரு வசனங்களும் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்தன. ஏகப்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதி ஒரு எழுத்தாளராக கதாசிரியராக என்றுமே நிலைத்து நிற்பவர் கலைஞர் கருணாநிதி. அவரின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வெளியிடவும் செய்தார்.

இந்த நிலையில் ஒரு இயக்குனராக நடிகராக தன் எதார்த்தமான பழக்க வழக்கத்தால் அனைவரின் அன்பை பெற்றவர் நடிகர் மனோபாலா. இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். சத்யராஜ், விஜயகாந்த், ராதிகா போன்றோரை வைத்து அதிக படங்களை இயக்கியிருக்கிறார்.

rajini manobala

ஒரு சமயம் ரஜினியை வைத்து படம் இயக்க மனோபாலாவுக்கு வாய்ப்பு வந்தது. அதே சமயம் கலைஞரின் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கி தருவதாக ஏற்கெனவே தேதி கொடுத்திருந்தாராம் மனோபாலா. ரஜினிபட வாய்ப்பும் கலைஞர் படமும் ஒன்றாக ஒரே தேதியில் ஆரம்பிக்கிற சந்தர்ப்பந்தில் வந்திருக்கிறது.

இதையும் படிங்க : பொழைக்க தெரியாத ஆளா இருப்பாரோ?.. லட்ச ரூபா சம்பளத்தை வேண்டாம் என மறுத்த ரஜினி!..

அந்த நேரத்தில் ரஜினி கொடி கட்டி பறந்த சமயம். ரஜினியை வைத்து படம் இயக்க முதன் முதலாக ஒரு வாய்ப்பு வந்ததை தட்ட முடியாமல் கலைஞரிடம் போய் கேட்டிருக்கிறார். ஐயா ரஜினிய வைத்து படம் எடுக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்று கூறினாராம். அவரும் நல்ல விஷயம் தான் போய் எடு என்று சொன்னாராம்.

rajini

உடனே மனோபாலா இல்ல ஐயா உங்கள் படம் ஆரம்பிக்கிற அதே தேதியில் தான் ரஜினியின் படமும் ஆரம்பிக்கிற கட்டாயத்தில் இருக்கிறேன் என்று கூறினாராம். உடனே எந்தவித மறுப்பும் சொல்லாமல் கலைஞர் ‘என் நிறுவனத்திற்கு எப்பொழுது வேண்டுமென்றாலும் படம் பண்ணலாம். ஆனால் ரஜினியின் இந்த வாய்ப்பு மிஸ் ஆகிட்டா மறுபடியும் வராது.அதனால் போய் அந்த வேலையை முதலில் பார்’ என்று மிகவும் பெருந்தன்மையாக கூறினாராம் கலைஞர். அதன் பிறகு மனோபாலா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த படம் தான்
ஊர்க்காவலன் திரைப்படம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini