மாரி செல்வராஜ் கொடுத்த செம விமர்சனம்! மகிழ்ச்சியில் கர படக்குழு
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கர திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கூறியுள்ள விமர்சனம் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் படம் கர. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், ப்ரிதிவி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகிவிட்டன.
இந்த நிலையில் கர படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் படம் குறித்து கூறிய விமர்சனம் அனைவருக்கும் படம் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவ்ர் கூறியபோது,
இப்போது தான் கர பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும் என்று பாரட்டியுள்ளார்.
