25 கோடி பேங்க்ல வைத்துக்கொண்டு..ஏசி ரூமில் உட்கார்ந்துகிட்டு… - சத்யராஜை விளாசிய மோகன் ஜி!

 
25 கோடி பேங்க்ல வைத்துக்கொண்டு..ஏசி ரூமில் உட்கார்ந்துகிட்டு… - சத்யராஜை விளாசிய மோகன் ஜி!

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி அளித்திருந்தார். அதில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் இணைந்து வாழும் லிவ்-இன் முறையை ஆதரித்துப் பேசினார். மேலும், திருமணம் செய்துகொண்டுதான் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வதில் எனக்கு ஒப்புதல் உண்டு என்றும் அவர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்தார்.அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளின் இந்த முற்போக்கான கருத்துக்கு தந்தை என்ற முறையில் நடிகர் சத்யராஜும் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். தனது வாழ்நாள் முடிவுகளை எடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு என அவர் குறிப்பிட்டிருந்தார். திருமணம் என்பது ஒரு தனிநபர் விருப்பம்..இன்றுள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்தி திருமணம் இன்றியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். மகளின் முற்போக்கு கருத்துக்கு என் முழு ஆதரவு உண்டு என்று கூறினார்.

சத்யராஜ் குடும்பத்தின் இந்தக் கருத்துக்கு திரௌபதி', ருத்ர தாண்டவம்' படங்களின் இயக்குநர் மோகன் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், தனக்கு யாரெல்லாம் பிடிக்கிறதோ அவர்களோடு சேர்ந்து வாழலாம் என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்து. அதைவிட கொடுமை என்னவென்றால், திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பது சாதாரண மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று."
வங்கி கணக்கில் 25 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு, ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு சமூகத்திற்கு இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

From Around the web